யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நதி முருகன் ஆலய கடற்பகுதியில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் 6 இளைஞர்கள் ஒன்றாக நீராடிய நிலையில் திடீரென ஒருவரை காணவில்லை என தேடியபோது, அவர் சேற்றில் புதைந்து இருக்கலாமென வல்வெட்டித்துறை பொலுஸாருக்கு அறிவித்தனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் தேடுதலின் பின்னர் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்டவர் புலோலி வட மேற்கைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டிதுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.