நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 16 பொலிஸ் பரிசோதகர்கள் என 43 பேர் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக மேற்படி அலுவலகம் தெரிவித்துள்ளது.