கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வெளிநாடு செல்ல தடை விதித்தும் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்வதற்கு நீதவான் எச்.யு.கே. பெல்பொல தடை விதித்துள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் அவரிடம் மீட்கப்பட்டிருந்தது. அதன்படி, காலாவதியான பிஸ்டல் வைத்திருந்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைதானார்.