மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், காந்திப்பூங்காவில் நேற்று ஒன்றுகூடி விரைவாக தமக்கான நியமனத்தைத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி விரைவாக நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இம்மாதத்துக்குள்ளாக விரைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.