முல்லைத்தீவு முறிகண்டியில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.