யாழிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ரயிலில் நேற்றிரவு மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா தேக்கவத்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானவர் கூமாங்குளத்தில் வசிக்கும் 36 வயதுடைய வாசன் என்பவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இதுபற்றிய மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.