நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இரண்டு பேர் முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து குறித்த ஊடக சந்திப்புக்கு பணம் வழங்கிய சந்தேகத்தில் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர்களை தலா 5 இட்லசம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.