மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் நேற்றிரவு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி திகிளிவெட்டை பிரதேசத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிச்சந்திரன் (வயது 43) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் தனக்குச் செந்தமான வயலில் இரவு காவலுக்காக நேற்று இரவு சென்ற வேலையே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.