ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38) என்ற இளைஞர்

கடந்த மார்கழி 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்டபோது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுக்குள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு, மலை, காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும்.

குடியோறிகளை ஆள் கடத்தல் மாபீயா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும். காட்டுப் பகுதிக்குள் வைத்தே சாகடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.