திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதிச் சோதனை சாவடிகளை அகற்றுவதுடன், பாதுகாப்புக் கெடுபிடிகளிலிருந்தும் நிம்மதியாக வாழ வழி விடுமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) பிரேரணை ஒன்றின் போது நடைபெற்ற அமர்வின் போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தினர்.

அதேவேளை, கிண்ணியாவில் உள்ள சிற்பித் தொழிலாளர்களுக்கான அனுமதியையும் நிர்வாக முறையையையும் முன்னையவாறு, பிரதேச செயலாளருக்கு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சிற்பித் தொழிலாளர்களிடம் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய பொருள்களை அவர்களிடம் மீள ஒப்படையுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.