தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவி செயலாளர் அலிஸ் வேல்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை  வருகை தரவுள்ளார்.

அதனையடுத்து, பாகிஸ்தான், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர் தனது இலங்கை விஜயத்தின்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளு்டன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.