மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டுசவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவையற்ற பயணங்களில் ஈடுபடவேண்டாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று தமது கடவுச்சீட்டை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தூதரகம் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்