வௌிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் அனுராதபுரம், ஹொரவபொத்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்நாமில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடி செய்ததாக குறித்த பெண்ணுக்கு எதிராக ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஹொரவபொத்தானை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண்ணால் வெவ்வேறு நபர்களிடம் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணின் கணவரும் கைது செய்யப்படவுள்ள நிலையில், அவர் தற்போது வௌிநாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேநபரான பெண் இன்று (11) கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்