பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கலவி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமையின் அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாக நடைமுறைப்படும். மாவட்டஅடிப்படையில் 55 சதவீதமும்இ பின்தங்கிய பகுதி அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாகபாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர்என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சமிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ்மேலும் விசேட தேவையைக் கொண்டள்ள மாணவர்களுக்கு கல்விக்ககான சந்தர்ப்பதம்விரிவுபடுத்தப்படுமெனறும் அவர் கூறினார்.

அரசியல் தலையீடுகள் இன்றி பாடசாலைகளுக்காக அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையானதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்கான திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர்என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)