இரண்டு தரப்பினருக்கு  இடையிலான முரண்பாடு காரணமாக கேகாலை, மொரோன்தொட்ட பகுதியில் 8 இளைஞர்கள் மீது அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று (11) இரவு 08.45 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

படுகாயமடைந்த இளைஞர்கள் கோலை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.