புதுக்குடியிருப்பு – உடையார் கட்டுப்பகுதியில், நேற்று  (11) பயங்கரவாதக்  குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.உடையார்கட்டு தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில், அண்மையில், வெடிமருந்துகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட நபருடன் தொடர்பை வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே, இவ்விருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.