யாழ். ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியின் புதிய கட்டட திறப்புவிழா இன்று (12.01.2020) முற்பகல் 10.00 மணியளவில் அருட்தந்தை பேனாட்றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி நந்தினி சிவஞானம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் நினைவுக்கல் திறப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.