முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்துக்கு அருகில், நேற்று, முல்லைத்தீவு பகுதியில் இருந்து சென்ற கடற்படையினரின் ஊர்தி   சப்த கன்னிகள் ஆலயத்துக்கு முன்னால்  முல்லைத்தீவு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், மல்லாவியி துணுக்காயைச் சேர்ந்த கே.ஜீவன் (வயது 32) என்பவராவார்.

படுகாயமடைந்த அவரது மனைவி, ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கடற்படையின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.