இலங்கை வரவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ்க்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. அத்துடன், இருதரப்பினரதும் கூட்டு செய்தியாளர் மாநாடு அன்றைய தினம் பகல் 12 மணியிலிருந்து 12.40 வரை வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் யிக்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)