சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணிகள் இருவர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவித்து இன்று அதிகாலை 2.45 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரக்கப்ட்டுள்ளது.

எவ்வாறாயினும் சுகயீனமுற்றிருந்த குறித்த இரு பயணிகளையும் வைத்தியர்கள் பரிசோதிக்க முன்னரே அவர்கள் இருவரும் உயிரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

71 வயதான பெண் ஒருவரும், 64 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் இந்திய பிரஜைகளாவர்.

விசாரணைகளின் பின்னர் சடலங்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்்டிருந்தது.