வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சாவகச்சேரி அலுவகத்துக்கு முன்னால் இருந்து, இன்று (14) காலை, ஆட்லறி எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போதே, அங்கு ஆட்லறி எறிகணைகள் இருப்பது தெரியவந்தது.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், ஆட்லறி எறிகணைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் குழியில் மேலும் பல ஆட்லறி எறிகணைகள் இருக்குமென நம்பப்படும் நிலையில், அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.