முல்லைத்தீவு – வட்டுவாகல் ஆற்றங்கரை கடலை அடையும் பகுதியின் அண்மித்த பகுதியில் இருந்து, இன்று (14) 9 மிதிவெடிகள் இனங்காணப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பில், அப்பகுதி மக்களால் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த மிதிவெடிகளை, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.