2019ஆம் ஆண்டு இலங்கை ரயில் சேவையில் 800 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்ரயில் திணைக்கள ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச போக்குவரத்து துறை தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ரயில் சேவையின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பழைய ரயில் வண்டிகளை புதுப்பிக்கும் பணிகளை ஊழியர்களுக்கே வழங்குதல், பயனற்ற சில அதிகாரிகளை நீக்குதல் மற்றும் புதிய அதிகாரிகளை நியமித்தல், சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய சொகுசு ரயில் சேவையைத் தொடங்குவது போன்ற யோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.