பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு இடையிலான தொலைப்பேசி உரையாடல் தொடர்பான பரிந்துரைகளை நீதிச் சேவை ஆணையம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.