திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகச் செய்தி கூறுகின்றது.

7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும், மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.