தலைநகர் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய இடங்களுக்கான உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீது விதிக்கப்பட்டிருந்த நீக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 25 வருடமாக விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் விமான சேவைக்காக தனியார் தேசிய விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய கொழும்பு- காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகொப்டர் தரையிறங்கும் இடத்திலிருந்து சுற்றலாப் பயணிகளுக்கான உள்நாட்டு பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்பாக புதிய விமான ஓடுபாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகளுக்கு கொழும்பிலிருந்து கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், சீகிரியா, அருகம் குடா, பொலன்னறுவை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விமான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.