ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்தனகல அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை நீக்கியதன் பின்னர் குறித்த பதவிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவராவார்.