புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்குக் கிடைத்துள்ளதென, அச்சக அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அதற்கமைய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரை 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.