யாழில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காட்டு பகுதியிலுள்ள மேற்படி வங்கி முகாமையாளரின் வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.