யாழ் நகரில் நேற்று (16.01.2020) ‘கோபவனி’ நிகழ்வு இடம்பெற்றிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப் பவனியில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், யோகேஸ்வரன் ஆகியோரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஐங்கரநேசன் ஆகியோரும், வர்த்தகர்களும், பொதுமக்களும், கலந்துகொண்டிருந்தார்கள்.