நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவிற்கு பிணை வழங்குவதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மீள்திருத்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அறிவித்தல் விடுப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மீள்திருத்த மனுவினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கில் முன்னிலையாவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.