எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் பகுதியில் இயங்கிவந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மிக நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை இயங்க வைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக பார்வையிட்டு வந்திருந்த நிலையில் இதுவரை தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கைத்தொழில் சிறு கைத்தொழில் அரசு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ருந்தார்.

இதன்போது குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை பார்வையிட்ட பின்னர் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் மேற்படி தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச மக்களிடம் தெரிவித்துள்ளார்.