சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். புதிய வைரஸ் ஒன்று சீனாவின் உஹான் பிராந்தியத்தில் பரவியுள்ளது. இதன்காரணமாக சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் முக கவசத்தை அணிந்து கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.