Header image alt text

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் தீர்மானங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆதரவு தெரிவித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் பொது தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து தாம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. Read more

எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ரயில்வே நிலையங்களுக்கு அருகிலும் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரயில் – பஸ் கூட்டு சேவை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலும் சுமார் 100 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். Read more

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹூங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியில் பயணித்த வேனில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. Read more

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. Read more

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, சட்டவிரோதமாக பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read more

நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறுவனமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆணைக்குழு தயாராகியுள்ளது. சரியான தரவுகளை தயாரித்து, மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Read more

இலங்கை இராணுவத்தினருக்கு ரூபாய் 50 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்குவதாக,

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதிக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவைகளின் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொண்ட பட்டதாரிகளுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வங்கிகளூடாக இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 84 பில்லியன் ரூபாய் கடன், செலுத்த வேண்டியுள்ளது. Read more