ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் தீர்மானங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆதரவு தெரிவித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் ஒழுக்காற்று குழு நேற்று முற்பகல், கட்சி தலைமையகத்தில் கூடியபோதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.