ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, சட்டவிரோதமாக பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.