பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹூங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியில் பயணித்த வேனில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 21வயது பிக்கு, அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,

தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்நபர் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபடுபவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.