புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில், புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஜேர்மனில் புகழிடம் கோரிய ஜ.நவநீதன் எனும் இலங்கை அகதி ஒருவருக்கே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.