நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இன்று மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான 17 பேரடங்கிய தெரிவுக் குழுக்களுக்கான பெயர்ப் பட்டியலுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.