யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, நெடுங்குளம் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அரச மயப்படுத்துவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணிகள் தனியாருக்கு சொந்தமானது என கூறி அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கொழும்புத்துறை – நெடுங்குளம் பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக யாழ் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.இதற்கு அந்த காணிகளின் உரிமையாளர்களும் அந்த பகுதி மக்களும் இணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ பிரதேச செயலாளர் சுதர்சன் பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்ததைஅடுத்து நிலைமை வழமைக்கு திரும்பியது.