காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கியை மீட்ட விசேட அதிரடிப்படையினர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு உர பையினுள் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி இயங்கு நிலையில் இல்லை எனவும் அதன் இரண்டு ரவைக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.