புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி மலேசியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், மலேசிய அரசியல்வாதிகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் கடந்த தினம் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.