முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் காலம் எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியிருந்தனர்.