யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியைக் கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவரது கணவரை, பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், இன்று உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர். இதன்போது, ‘எதிரி, எனது மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்ததுடன், அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக் காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன’ என்று, மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.

இதையடுத்து, சந்தேகநபரை பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.