இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தினுள் தனியான இரண்டு விஸா கருமபீடங்களை திறக்க வானுர்தி தள மற்றும் விமான சேவைகள் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

அந்த நிறுவகத்தின் உப தவிசாளர் ரஜீவ சூரியஆராச்சி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வானுர்தி தளத்திற்கு விஜயம் செய்தபோது வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்டுநாயக்க வானுர்தி தளத்திற்கு மேலதிக காவற்துறை பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, வானுர்தி தளத்திற்கு பிரவேசிக்கும் பாதையில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக எவரிவத்த சந்திக்கு அருகில் மாற்று பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தற்போது இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வானுர்தி தள மற்றும் விமான சேவைகள் நிறுவகத்தின் உப தவிசாளர் ரஜீவ சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.