சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

அவர் இன்று காலை 9.30 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆஜராகி இருந்தார். சமீபத்தில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் படி வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.