கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி ஒருவரும் மற்றும் இந்நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ள சீன நாட்டு பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசித அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர்களுடைய சளி மாதிரிகள் மற்றும் இரத்த மாதிரிகள், சோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.