பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கு அமைய இலங்கை விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க உள்ளார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை, பாகிஸ்தானின் கடற்படை தளபதி சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.