ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்துள்ளனர். அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பின் அவசியத்தையும் இரா சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.