Header image alt text

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ரமோன் அல்கராஸ் மற்றும் டவோ டெல்சூர் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களின் கட்டளைத்த தளபதி உள்ளிட்ட குழுவினர், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் அத் திணைக்களம் செயற்படவுள்ளது.

சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வெளியேறும் பிரிவினூடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜனவரி 29ம் திகதிவரை நிறுத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Read more

ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்த சேவை கடந்த வெள்ளிக்கிழமை வரை பரிசோதனை மட்டத்தில் காணப்பட்டது. Read more

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். Read more

சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். Read more